இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனேவே நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹசினி பெரேரா 25 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட், தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 113 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 1 ரன்களும், ஜெமிமா 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் 13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.







