கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் தான்சானியா நாட்டில் ஆப்பிரிக்காவின் மிகவும் உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. இந்த மலைக்கு சுற்றுலா சென்ற பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அந்த சுற்றுலா பயணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உடல்நலம் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் மருத்துவமனைக்கு சென்றுள்ளது. அப்போது ஹெலிகாப்டரில் 2 சுற்றுலா பயணிகள், மருத்துவக்குழுவினர் உள்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் மலையின் ரரூப் கேம்ப் பகுதியில் இருந்து கிலப் சம்மிட் பகுதி நோக்கி ஹெலிகாப்டர் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பெரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







