அஜித்துடன் அட்வென்சர் பைக் பயணம் செய்த நடிகை மஞ்சு வாரியர்

நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சுவாரியர் பைக் பயணம் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அஜித்தின் ஏகே61 படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி என…

நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சுவாரியர் பைக் பயணம் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்தின் ஏகே61 படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி என பலரும் நடித்து வருகின்றனர். இப்படப்பிடிப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்பாக அஜித் இடைவெளி எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அஜித் அதன் பின் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார். அந்தப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்த ஷூட்டிங்கை நிறைவு செய்தவுடன் தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் அஜித்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் அஜித் பைக் சுற்றுப் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அஜித் தனது நண்பர்களுடனம் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் பைக் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பைக் சுற்றுப் பயணத்தில் தற்போது நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ” சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் அவர்களுக்கு நன்றி. பயணங்களில் அதிக ஆர்வம் கொண்ட நான் நான்கு சக்கர வாகனத்தில் பல கிலோமீட்டர்கள் பயணித்திருக்கிறேன். முதல்முறையாக டூவிலரில் ஒரு டூர் வந்திருக்கிறேன். இதற்கு காரணமான சக பயணிகளுக்கு நன்றி. இந்த அட்வென்சர் பயணத்தில் என்னை இணைத்துக் கொண்ட அஜித் அவர்களுக்கு நன்றி ” எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.