சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இளைஞர்களின் பிரேதத்தை போலீசார் கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் இருந்து நேற்று மாலை 10 பேர் கொண்ட நபர்கள் யுடியூப் சேனலுக்கு வீடியோ எடுப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் படவேடு செண்பகத்தோப்பு மற்றும் வனப்பகுதிகளில் வீடியோ எடுப்பதற்காக சென்றனர். இளைஞர்கள் அனைவரும் படவேடு ராமர் கோவில் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் தங்கி இருந்து யூடியூப் சேனல் வீடியோ எடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : 3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
இதனை தொடர்ந்து இன்று மதியம் ராமர் கோயில் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் ஆழமான தண்ணீர் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அதில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஸ்ரீ வர்ஷன் என்பவர் ஆழமான பகுதியில் நீரில் இறங்கியுள்ளார். நீரில் மூழ்கிய ஸ்ரீவர்சனை கண்டு சென்னை கீழ்கட்டளையைச் சேர்ந்த ராமபுத்திரன் என்பவரும் நீரில் இறங்கியுள்ளார்.
இந்த இரு இளைஞர்களுக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியாகினர். இதுகுறித்து தீயணைப்பு வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்று நீரில் இறங்கி இருவரின் உடலையும் சடலமாக மீட்டெடுத்தனர்.
இதையும் படியுங்கள் :பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையான மாணவி சத்யாவின் தாய் மரணம்!
இருவரின் உடலையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– யாழன்







