பரங்கிமலை ரயில் நிலையத்தில், கொலையான மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி, புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் தலைமைக் காவலர் ராமலட்சுமி. இவரது மூத்த மகள் சத்யா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு ரயிலில் ஏறிச்செல்ல முயன்றபோது, அருகில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர் சதீஷ், திடீரென ரயில்முன் தள்ளிவிட்டதில் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவம் தொடர்பாக தொடக்கத்தில் பரங்கிமலை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார், சதீஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு முழுவதும் மார்ச் 28ல் வேலை நிறுத்தப் போராட்டம் – அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செயிண்ட் தாமஸ் மவுண்ட் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த ராமலட்சுமி, நீண்ட நாட்களாக தனது மகளின் இழப்பை தாங்க முடியாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.