முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

லைட் மேன்களின் வாழ்க்கை பாதுகாப்பிற்காக நிதி திரட்டும் ஏ.ஆர் ரகுமான்

லைட் மேன்களின் வாழ்க்கை பாதுகாப்பிற்காக நிதி திரட்டும் உன்னத முயற்சியில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இறங்கியுள்ளார்.

லைட் மேன்கள் திரைப்படத் துறையின் ஒரு அங்கம் என்பதை தாண்டி, இன்று புகழ் வெளிச்சத்தில் இருக்கும் பல பிரபலங்களுக்கு முதல் வெளிச்சம் காட்டிய நபர்களும் ஆவர்கள் தான். இருப்பினும் ஒளிக்கு பின்னால் இருக்கும் அவர்களது முகங்கள் எப்படி இருட்டுக்குள் மறைக்கப்படுகிறதோ, அதை போலவே அவர்கள் சந்திக்கும் இன்னல்களும், பொருளாதார சிக்கல்களும் இன்றளவும் பலருக்கும் தெரிவதில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் ஒன்றாக அவர்கள் சரியான பணியாளர் அல்லது ஒப்பந்த அந்தஸ்தின் கீழ் வராததால், அவர்களுக்கு ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் இழப்பீடு அல்லது காப்பீடு பெறுவது கடினமான ஒன்றாக இருக்கிறது. இந்த சிக்கலை ஓரளவு தீர்க்க, இசை புயல் ஏ.ஆர் ரகுமான்,
லைட்மேனுக்கு உதவ கார்பஸ் நிதியை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் ஒரு சூஃபி கச்சேரியை இலவசமாக நடத்தவும், அதன் வருவாயை கார்பஸ் நிதிக்கு வழங்கவும் முடிவெடுத்துள்ளார்.

அதன்படி வருகிற மார்ச் 19, 2023 அன்று ARR FOUNDATION மற்றும் ROTARY INTERNATIONAL ஆகியவை இணைந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி சூஃபி (sufi) கச்சேரியான ‘விங்ஸ் ஆஃப் லவ்’ (WINGS OF LOVE) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது ,அந்த நிகழ்ச்சியின் மூலம் வருகிற வருமானம் ‘சேவ் லைட்மேன் ஃபண்ட்’ (SAVE LIGHTMAN FUND) என்ற கார்பஸ் நிதிக்கு வழங்கப்பட
உள்ளதாம். இந்த நிதி திரைப்படத் துறையின் லைட்மேனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் லைட் மேன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்களிடமிருந்தும் இதற்காக நன்கொடைகள் சேகரிக்கப்படுவதோடு, அதனை ஒழுங்கு முறைப்படுத்தி சரியான வகையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். அதில் குறிப்பாக அனைத்து ஸ்டுடியோக்களிலும் பாதுகாப்பு கருவிகளை நிறுவவும், லைட் மேன் குழுவிற்கு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து
பயிற்சி அளிக்கவும் வழிகாட்டப்படுமாம். லைட் மேன்களுக்காக ஏ.ஆர் ரகுமான் எடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறதாம்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

RC15 படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Jayasheeba

நகைக்கடையை சூறையாடிய முதியவர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

G SaravanaKumar

88 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் குறைந்த கொரோனா எண்ணிக்கை!

Vandhana