பாஜக தலைமையுடன் தொடர்பில் இருந்து வருகிறோம் : பண்ருட்டி ராமச்சந்திரன்

பாஜக தலைமையுடன் தொடர்பில் இருந்து வருவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ்…

பாஜக தலைமையுடன் தொடர்பில் இருந்து வருவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத்தொடரந்து பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதித்தோம். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அக்டோபர் 11ஆம் தேதி தலைமை கழக நிாவாகிகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. உறுப்பினர் சேர்ப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். மக்களவைத் தோதல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது .பாஜக தலைமையுடன் இப்போதும் தொடாபில் இருந்து வருகிறோம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மூன்றாம் அணி அமையுமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.