உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
இந்நிலையில் உலகிலேயே முதல் நாடாக பசிபிக்கில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவில் 2026-ம் ஆண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 3.38 மணிக்கு கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர்.
கிரிபாட்டி தீவை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் புத்தாண்டு பிறந்துள்ளது.
இதையடுத்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை அடுத்து இந்தியாவில் புத்தாண்டு பிறக்கிறது.







