சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று கைது செய்தனர். சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.

சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
அதேபோல், ஊதிய உயர்வு, முழுநேர பணி , மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் போராடி வந்தனர்.

இதனிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

ஆசியர்களின் கோரிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து ஆசியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 3 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே போராட்டத்தை நிறைவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை போலீசார் இன்று காலை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அவர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.