தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் குட் பேட் அக்லி பட இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார்.
நடிப்பு மட்டுமின்றி கார்பந்தயம் துப்பாக்கி சூடு ஆகியவற்றிலும் ஆர்வம் உள்ளவர் அஜித்குமார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த அணி கடந்த ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் திருப்பூரில் உள்ள வெள்ளகோயில் அருகேயுள்ள கொங்குநாடு ரைஃபிங் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த விடியோவைப் பகிர்ந்த அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். .அந்த விடியோவில், “கொங்குநாடு ரைஃபிங் கிளப்பில் இலக்கை நோக்கி அமைதி, கவனக் குவிப்பு, நிறுத்தமுடியாதவராக அஜித் குமார்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் வரவிருக்கும் புத்தாண்டு வளமாகவும், அழகான வாழ்க்கையாகவும் அமைய வாழ்த்துக்கள் அன்புடன் அஜித், அவரது குடும்பம் மற்றும் குழு” எனக் கூறியுள்ளார்.
On Target💥
Ajith Kumar at Kongunadu Rifle Club — calm, focused, unstoppable. 🎯🔥
Wishing you all & your loved ones a Prosperous New Year ahead & a Beautiful life!
Love
Ajith, Family & Team ❤️#AKIsBack #AjithKumar #AK #KongunaduRifleClub #AjithKumarRacing #PowerAndPrecision… pic.twitter.com/m4VtwKFxVC— Suresh Chandra (@SureshChandraa) December 31, 2025







