ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.  பின்னர் இது தீவிர…

தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.  பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.  அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து.  இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  “கனமழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கும்!” -அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,  இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.  தொடர்ந்து மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளது.

தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.