தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் மூலம் அறிமுகமானார். கொலவெறி பாடலின் வெற்றி மூலம் அவர் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து அவர் ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையைமைக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பவன் கல்யாண், நானி உள்ளிட்ட முன்னணி நடிகர்கலின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் வெளியான ஜவான் (2023) திரைப்படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகியுள்ளார்.
அனிருத் தனது ஆரம்ப நாட்களில் பலவேறு ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார். அக்கால கட்டத்தில் அப்பாடல்கல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் அனிருத் தனது புதிய ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அரவிந்த் என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலை அனிருத் இசையமைத்து, தயாரித்து பாடியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு சூப்பர் சுப்பு வரிகள் எழுத்தியுள்ளார்.




