நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தான் அரசியலுக்கு வர இருப்பதாகவும் அது குறித்து மக்கள் தம் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என யோசித்தேன். வாருங்கள் என நீங்கள் அழைத்தது சந்தோஷம். ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். . என் ரசிகர்களாகிய உங்களை அழைத்து என் தாயை மேடை ஏற்றி அந்த முடிவை விரைவில் தெரிவிக்க உள்ளேன்.
தவெக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுகிறது. நாம் ஒரு புது ஏரியாவுக்கு வாடகை வீட்டுக்கு சென்றால், வெளியிலிருந்து பார்க்கும்போது வீடு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உள்ள சென்றால் தான் எங்கு என்ன பிரச்சனை இருக்கு என்று தெரியும்; அதனால் அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.




