12 ஆண்டுகளில் தரமான மருத்துவ சேவை – பிரதமர் மோடி பெருமிதம்…!

தரமான சுகாதார சேவைகளை மலிவு விலையிலும் எளிதில் கிடைக்கக்க கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா பாடுபட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “கடந்த 12 ஆண்டுகளில், தரமான சுகாதார சேவைகளை மலிவு விலையிலும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையிலும் மாற்றுவதற்கு இந்தியா பாடுபட்டுள்ளது.

சமூகத்தின் மிகவும் நலிந்த பிரிவினருக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’-ஐக் கொண்ட நாடாக அறியப்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

‘பிரதம மந்திரி பாரதிய ஜன ஔஷதி பரியோஜனா’ போன்ற பிற முயற்சிகள் மருந்துகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்துள்ளன. ஸ்டென்ட்கள் (stents) மற்றும் முழங்கால் மாற்றுப் பொருள்களின் (knee implants) விலைகள் குறைந்துள்ளதால், அது பலருக்குப் பயனளித்துள்ளது.

அதே வேளையில், கூடுதல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம், மருத்துவக் கல்வி மக்களால் எளிதில் அணுகக்கூடியதாக மாறியுள்ளது.

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இதுவரை எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.