சட்டப்பேரவையில் விவாதம் நடத்தாமல், தொடர்ந்து வெளிநடப்பு செய்தவர் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, அந்த தொகுதியில் ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மருத்துவ படிப்புக்கு 7.5 சதவிகிதமும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதமும் உள் இட ஒதுக்கீடு அளித்தவர் எடப்பாடி பழனிசாமி ஆனால், சட்டப்பேரவையில் விவாதம் நடத்தாமல் தொடர்ந்து வெளிநடப்பு செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் என குற்றம் சாட்டினார்.







