திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் இதுவரை 170க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையே, ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 12ம் தேதி ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸானது.
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ‘படையப்பா’ படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்களுடன் லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் கண்டுகளித்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். படையப்பா படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். வெற்றிபெற்ற பழைய திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்தாலும் சில திரைப்படங்களே மீண்டும் வெற்றி பெறுகின்றன.
அந்த வகையில், இப்படம் ரீ-ரிலீஸில் ரூ. 25கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், நடிகர் ரஜினியை ‘படையப்பா’ படக்குழு சந்தித்துள்ளது. நடிகை ரம்யா கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.







