கோரைப்பாய் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்: கடம்பூர் ராஜு

பாய் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என கோவில்பட்டி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கடம்பூர் ராஜு வாக்குறுதி அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம்…

பாய் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என கோவில்பட்டி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கடம்பூர் ராஜு வாக்குறுதி அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். கயத்தார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனார் ஊத்து, மாணங்காத்தான், வடக்கு இலந்தைகுளம், தெற்கு இலந்தைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வேட்பாளரை வரவேற்றனர். மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பாய் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், பாய் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சிட்கோ மூலமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.