அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!

சென்னை பெரம்பூரில் அரசு தாய்,சேய் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அதிமுக வேட்பாளர் என்.ஆர். தனபாலன் வாக்கு சேகரித்தார். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர்…

சென்னை பெரம்பூரில் அரசு தாய்,சேய் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அதிமுக வேட்பாளர் என்.ஆர். தனபாலன் வாக்கு சேகரித்தார்.

சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், லட்சுமி அம்மன் கோயில் தெரு , மேல்பட்டி பொன்னப்பன் தெரு , பள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர். இளம் வாக்காளர்கள் என்.ஆர். தனபாலனுடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது வாக்காளர்களுக்கு மத்தியில் பேசிய என்.ஆர்.தனபாலன், பெரம்பூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு தாய் சேய் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.