கொள்கை, செயல்திட்டம், செயல்பாடு என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா மற்றும் பூவிருந்தவல்லி பாமக வேட்பாளர் ராஜமன்னார் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கும் மாதம் 1,500 ரூபாய் ஊதியம், ஆறு எரிவாயு சிலிண்டர் இலவசம் மற்றும் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வாஷிங்மெஷின், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போது அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறவித்து அதை சிறப்பாக செயல்படுத்தி வருவதுபோல் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள நலத்திட்டங்கள் தொடர திருவள்ளூர் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும் பூவிருந்தவல்லி வேட்பாளர் ராஜமன்னாருக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் கொள்கை, செயல்திட்டம், செயல்பாடு அனைத்தும் சிறப்பாக இருப்பதால் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். மேலும் பூவிருந்தவல்லி தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெற்றிக்குப் பிறகு அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.