தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்

மனிதவளம் அனைத்தும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதால், தற்போது கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள…

மனிதவளம் அனைத்தும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதால், தற்போது கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகள், தபால் வாக்கு செலுத்தினர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் தொகுதியில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவை, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தபால் வாக்குகளை தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, கூர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார். மனிதவளம் அனைத்தும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதால், தற்போது கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தலுக்குப் பிறகே முழு வேகத்தில் இறங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.