தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபடுமாறு 15 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மமதா பானர்ஜி அழைப்பு

பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து அரசியல் சாசனத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.…

பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து அரசியல் சாசனத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களுக்கும் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.


அதில், “பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் ஆளுநர் மூலம் அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கப்படுகின்றது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் ஆளுநர்கள், நடுநிலை அரசியலமைப்பு அதிகாரிகளாக செயல்படாமல் பாஜகவின் தலைவர்கள் போல செயல்படுகின்றனர்” என கடிதத்தில் மமதா குற்றச்சாட்டியுள்ளார்.


மேலும் அந்த கடிதத்தில் ஆளுநர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பாஜக பிரச்சனைகள் ஏற்படுத்தி வருவதாகவும், மோடி அரசு வேண்டுமென்றே பாஜக அல்லாத மற்ற கட்சிக்களுக்கு நிதி வழங்க மறுக்கிறது கூறியதோடு, இதனால் மக்கள் பயனடையும் வகையில் தங்களால் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.