நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 1-ம் தேதி முதல்) 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கும், முன் களப்பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. பிறகு மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கும் மேல் உள்ள இணை நோயாளிகளுக்கும் மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

நாட்டில் இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. கொரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாக தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக தற்போது இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.







