தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479…

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்புடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்தபடி உள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 123-ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினத்தில் (டிச.23)  21 பேருக்கு கொரோனா தொற்றானது புதியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: சலார் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்து சாதனை!

மேலும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.