“பொங்கலுக்கு பிறகு நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்” – செங்கோட்டையன் பேட்டி

பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (டிச.20) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“எஸ்ஐஆர் குறித்து ஏற்கனவே தவெக தலைவர் விஜய் விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவே பொருத்தமாக இருக்கும். ஈரோட்டில் தவெக தலைவர் விஜயை பார்க்க சுமார் 3 லட்சம் பேர் கூடியிருந்தனர். ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர். அது அவர்களின் கருத்து. தவழும் குழந்தை தான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னாட்சி நடத்துவார்கள்.

இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து, இன்று மாலை தலைவரிடம் பேசிவிட்டு அது எந்த இடம் என்பதை முடிவு செய்வோம். களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் தான் தீர்ப்பளிக்கும். பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்”

இவ்வாறு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.