சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!

சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது…

சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படியுங்கள்:  மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

பணியில் இருக்கும் போதே அநாகரீகமாக நடந்து கொண்ட தலைமை காவலர் மீது சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உத்தரவிட்டார்.

அதன்படி வேலூர் சிறைக்கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் துறைரீதியிலான விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமைக்காவலர் ஜெயக்குமாரை சஸ்பெண்டு செய்து வேலூர் சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.