மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.  உத்தரகாண்ட் மாநிலம்,  உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.  அங்கு,  திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால்…

மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். 

உத்தரகாண்ட் மாநிலம்,  உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.  அங்கு,  திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே மூடியது.  இதனால்,  அங்கு வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

இவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில்,  41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  பின்னர்,  பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு சின்னாலிசூர் சமூக நல மையத்தில் 18 மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் தொழிலாளர்களுக்கு இரண்டு முறை உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில்,  விரைவில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் மாற்றம் செய்யப்பட்டனர்.  இதனை மருத்துவர் பிம்லேஷ் ஜோஷி மற்றும் சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு சுகாதார நோடல் அதிகாரி உருதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.