ஜோ படத்துக்குத் திரைகள் அதிகரிப்பு

ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்ற ஜோ படத்துக்குத் திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘ஜோ’.  இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா…

ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்ற ஜோ படத்துக்குத் திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘ஜோ’.  இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாகவும் சார்லி,  அன்பு தாசன்,  ஏகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் திரையரங்கில் வெளியான இப்படம்,  ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.  காதல் கதையாக உருவாகியுள்ள ஜோ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்திற்கான திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

பெரிதாக புரோமோஷன் இல்லாமல் வெளியாகியிருக்கும் ஜோ, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.