சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேஜஸ் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிவேக விரைவு ரயில் கடந்த 2019 மார்ச் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. வெறுமனே ஆறரை மணி நேரத்தில் மதுரைக்கு சென்று விடலாம் என்பதால் மக்களிடம் இந்த ரயிலுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையும் படியுங்கள் : அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்
சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிக்கு காலை 10 மணிக்கு வந்து சேரும். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 12.15 மணிக்கு மதுரை சென்றடைகிறது. மீண்டும் மதுரையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் வருகிறது. ஒரே நாளில் மதுரைக்கு சென்று திரும்பும் ரயிலாக இருப்பதால் பயணிகள் அதிகளவில் இந்த ரயிலுக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த இரயில் அடுத்ததாக திருச்சியில் தான் நிற்கும். எனவே தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்தனர். இது தொடர்பாக, அனுமதி கேட்டு ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதியது
இதனையும் படியுங்கள்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா
இந்த நிலையில் தேஜஸ் ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் மதுரை வழித்தடத்தில் செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் வரும் 26 ஆம் தேதி முதல் தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது
அடுத்த ஆறு மாத காலத்திற்கு பரிசோதனை முறையில் தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
– யாழன்