திருமணத்தில் பாரம்பரிய கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த மணமக்கள்

தமிழகத்தின் பாரம்பரிய நாட்டின மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி பொன்னமராவதியில் கால்நடை கண்காட்சியுடன்  வினோதமான திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற திருமண விழாவில் , தமிழ்நாடு பாரம்பரிய கால்நடைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள்…

தமிழகத்தின் பாரம்பரிய நாட்டின மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி பொன்னமராவதியில் கால்நடை கண்காட்சியுடன்  வினோதமான திருமணம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற திருமண விழாவில் , தமிழ்நாடு பாரம்பரிய கால்நடைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே உள்ள பொன்னடப்பட்டியை சார்ந்த சரவணன்-சரண்யா இணையரின் திருமண விழா, பொன்னமராவதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


இதனையும் படியுங்கள்: புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

ஜல்லிக்கட்டு ஆர்வலரான சரவணன் தனது திருமண விழாவில், தமிழகத்தின்
பாரம்பரிய மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வரிசைப்படுத்தி கண்காட்சி அமைத்திருந்தார். இதில் நாட்டு, மற்றும் காங்கேயம் உள்ளிட்டவகைகளை சார்ந்த காளைகள் மற்றும் கிடாய் ஆடுகள் பங்கேற்றன.

இது குறித்து மணமகன் சரவணன் தெரிவித்ததாவது..

நமது பாரம்பரிய நாட்டின மாடுகளை காக்கவேண்டும். பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டி அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லப்படவேண்டும். நாட்டுவகை மாடுகளை பாதுகாக்கவேண்டும். பல தலைமுறைகளாக காளைகள் வளர்த்துவரும் நாங்கள், எங்களது குழந்தைகள் போலத்தான் அதற்கு பெயர்வைத்து வளர்த்துவருகிறோம். ஜல்லிக்கட்டுப் போட்டியை ஊக்குவிக்கும் வகையில், இந்த கண்காட்சியை அமைத்துள்ளேன்” என தெரிவித்தார்.

காட்சிப்படுத்தப்பட்ட காளைகளை, திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரும் கண்டு ரசித்து காளைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டும், காளைகளை தொட்டும் ரசித்தனர் . இந்த கண்காட்சியை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கண்டு ரசித்தனர். விழாவில் ஜல்லிக்கட்டுப்பேரவை நிர்வாகி நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.