”எந்த தொடர்பும் இல்லை” – எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் மீண்டும் மறுப்பு……….!

எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பெரும் பணக்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீனுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தொடர்புடைய ஆவணங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எப்ஸ்டீன் கோப்புள் என்று அழைக்கப்படும் இந்த ஆவணங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. காரணம் அமெரிக்கா முன்னாள் அதிபர் கிளிண்டன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளிட்ட பல பேரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்த கோப்புகளில் இடம் பெற்றிருந்தன.

மேலும் அதில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்பின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனல் டிரம்ப் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களை மீண்டும் தனது மீதான குற்றசாட்டுகளை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது ; “எப்ஸ்டீன் விவகாரத்தின் நான் மறைக்க எதுவும் இல்லை. நான் விடுவிக்கப்பட்டேன். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எப்ஸ்டீன் வழக்கில் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன். உண்மையில், சிலருடன் சேர்ந்து நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ஜெஃப்ரி எப்ஸ்டீன் போராடினார்” எனக் கூறினார்.

ஆனால் எப்ஸ்டின் உடனான தொடர்பை கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே முறித்துக் கொண்டதாது டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை பலமுறை கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.