மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு புத்தக
கண்காட்சி மற்றும் இலக்கிய பெருவிழா நடைபெற்றுவருகிறது. மூன்றாம் நாளான இன்று
மாலை அங்கு நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் பிள்ளைகளின் வளர்ச்சியை தீர்மானிப்பது என்பது வீட்டு சூழல் அல்லது சமூக சூழலே என்கிற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் நடுவராக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது..
”தமிழர்களின் நாகரிகத்தை உலகத்திற்கு எடுத்துரைத்த சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வாராய்ச்சியை மதுரை அருகே கீழடி அகழாய்வு என தமிழ்நாடு பள்ளி புத்தகங்களில் அச்சிடப்பட்டு வருவது குறித்து தமிழார்வளர்கள் என்னிடம் எடுத்துரைத்துள்ளனர்.
அடுத்து அச்சடிக்கப்படவுள்ள பாட புத்தகங்களில் மதுரை அருகே கீழடி என்பதை மாற்றி
சிவகங்கை மாவட்டம் கீழடி என பாடநூல்களில் அச்சிட வழிவகை செய்யப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழை
கட்டாயமாக்கப்படும் நடவடிக்கை எடுத்துவரப்பட்டுவருகிறது.
நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு பின்னர் தமிழகத்தின் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம்
அமல்படுத்தப்பட இயலாது நீதிபதியின் அறிக்கைக்கு பின்னரே அடுத்த ஆண்டுதான்
தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தக்கூடிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்தும் எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை” என திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.
– யாழன்