தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இட்லி கடை, குபேரா மற்றும் தேரே இஷ்க் மே உள்ளிட்ட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷ், ’கர’ என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குறார்.
இதற்கிடையில் அடுத்த படமான ’D 55’ குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன் படி தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மேலும் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில், ‘D 55’ படத்தின் சாய் பல்லவி நடிக்கிறார் என்று படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.








