சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1 லட்சத்து 11,600-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.14,030-க்கும், சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12,240-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிவிலையானது கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 280-க்கும், கிலோவிற்கு ரூ.20,000 குறைந்து ரூ. 2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.







