2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் வரும் மார்ச் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வரும் மார்ச் மாதம் 9ஆம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் மாதம் 9-ந்தேதி கூடுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று மாலை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
அண்மைச் செய்தி: 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? – அமைச்சர் பொன்முடி கேள்வி
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ இரயில் திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்த சில வார்த்தைகள் இல்லை என கூறி ஆளும் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர். ஆளுநர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக தீர்மானங்களை வாசித்தார். முதலமைச்சர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அமைச்சரவைக் கூட்டம் வரும் மார்ச் 9ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-யாழன்







