தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க உரிய உபகரணங்கள் இல்லாததால் வனத் துறையினர் திணறி வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள குரங்கணி மலை ப்பகுதியில்
இரண்டாவது நாளாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. புலியூத்து வனப் பகுதியில்
இருந்து குரங்கணி மலைத் தொடரில் ஹெவி குண்டு என்னும் மலைப் பகுதியில் சுமார்
ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 20க்கும்
மேற்பட்ட வனத் துறை பணியாளர்கள் காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்து
வருகின்றனர். போதிய தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததால் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் பல்வேறு அரிய வகை மூலிகைகள், மரங்கள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன. இதனால், இப்பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்கள் காட்டுத் தீயால் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தீ தொடர்ந்து பரவி வருவதால் இப்பகுதியில் உள்ள மா, இலவம் மரங்கள், பாக்கு மரங்கள் போன்றவை பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கான நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா