செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை
காஞ்சிபுரம் மாவட்ட பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மருத்துவர்
செல்வகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியையும் அவர்கள் ஆய்வு செய்தனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை ஆய்வு செய்த பிறகு, உபரிநீர் செல்லும் அளவு மற்றும் ஏரியில் உள்ள நீரின் அளவை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதையும் படியுங்கள்: “நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

அப்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகப்படியான தண்ணீர்
திறந்து விடப்பட்டால்,  ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலை பாதிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளாதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்  உபரி நீர் செல்லும் கால்வாயில் தடுப்பு அமைக்க வேண்டும் எனவும் சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நீர்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.