மத்திய ஆப்பிரிக்கவில் அமைந்துள்ள நாடான காங்கோவில் பல்வேறு கிளர்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இக்குற்றசாட்டை ருவாண்டா மறுத்து வருகிறது.
இந்த நிலையில் கிழக்கு காங்கோவில் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ருபயா கோல்டான் சுரங்கத்தில் கடந்த புதன் கிழமை பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. செல்போன், கணினி உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் டான்டலம் என்னும் உலோகத்தின் மூலப்பொருளான கோல்டான் தாதுவானது இந்த சுரங்கத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள கிளர்ச்சி குழுவால் நியமிக்கப்பட்ட அம்மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் லுமும்பா கம்பேரே முயிசா ”சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் சந்தைப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் பலியாகியுள்ளர் எனவும் மேலும் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையே காரணம் என கூறப்படுகிறது.







