இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில் டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளில் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.
இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இண்ட நிலையில் தற்போது இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி முதல் பேட்டிங் செய்ய உள்ளது.
அணி விவரம்
இந்தியா : அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர் ), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்( கேப்டன் ), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து : டிம் சீஃபர்ட்( விக்கெட் கீப்பர் ), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், பெவன் ஜேக்கப்ஸ், மிட்செல் சான்ட்னர் ( கேப்டன் ), கைல் ஜேமிசன், இஷ் சோதி, லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி.







