பேனா நினைவுச் சின்னம்: கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவுகள் வெளியீடு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரினா கடலில் 134 அடி உயரத்தில்…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரினா கடலில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தின் விவரங்கள் வெளியாகி உள்ளன. கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 22 பேர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையும் படியுங்கள்: தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் உள்ளிட்ட 12 பேர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் உடைப்பேன் என சீமான் பேசியது அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்து கேட்பு கூட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தோரின் விவரங்கள் வெளியாகியுள்ளன.. அதன்படி

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கல்யாணராமன், நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் , திருவல்லிக்கேணி வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி, மீனவர் அமைப்பின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தனசேகர்,  ராயபுரத்தைச் சேர்ந்த இளங்கோ, அகில இந்திய பராம்பரிய மீனவர் சங்க நிர்வாகி மகேஷ், பழவேற்காட்டைச் சேர்ந்த சகாயராஜ்,  காசிமேடு பகுதியைச் சேர்ந்த இளங்கோ,  மீனவர் அமைப்பைச் சேர்ந்த காசிமேடு நாஞ்சில் ரவி ,  திருவெற்றியூரைச் சேர்ந்த பிரகாஷ்,  திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மனிமாறன் , பொன்னேரியைச் சேர்ந்த மகிமை ராஜ் , தமிழ்நாடு மீனவர் பேரவையைச் சேர்ந்த பார்த்திபன், நொச்சிக் குப்பத்தை சேர்ந்த தம்பிதுரை, விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி எண்ணூரைச் சேர்ந்த நவகுமார், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பரமசிவம் , மதுரையைச் சேர்ந்த பசும் பொன் பாண்டியன் , பாலவாக்கத்தைச் சேர்ந்த விஜயபாலன் , மீனவர் கிராம சபைச் சேர்ந்த ரூபேஷ் குமார் , திருவெற்றியூரைச் சேர்ந்த குமரேசன் ஆகியோர் பேனா சின்னம் அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சட்டப்பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலாளர் அருள் முருகானந்தம் , ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சங்கர், பாஜக மீனவர் பிரிவைச் சேர்ந்த நீலாங்கரை முனுசாமி, தேசிய பாரம்பரிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி, நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த செம்மலர் சேகர் , மே 17 இயக்க திருமுருகன் காந்தி, பெசன்ட் நகர் பாபு , சமூக செயல்பாட்டாளர் முகிலன் , அகில இந்திய மக்கள் கட்சியைச் சேர்ந்த அண்ணாதுரை, மீனவர் மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த சங்கர், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , விருதுநகரைச் சேர்ந்த மீனா, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.