அனுராக் காஷியப்பின் ’கென்னடி’ பட டிரெய்லர் வெளியீடு…….!

அனுராக் காஷியப் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கென்னடி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷியப் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ’கென்னடி’. திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் ராகுல் பட் மற்றும் சன்னி லியோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோரும் நடித்துள்ளனர்.

மும்பையில் பகலில் டாக்சி ஓட்டுநராகவும் இரவில் ஒப்பந்த கொலையாளியாகவும் செயல்படும் துக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல் அதிகாரியின் கதைதான் கென்னடி படத்தின் மையம்.

இப்படம் பிப்ரவரி 20 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.