முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு தேடி
சாலையோரம் உலா வந்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு தேடி
சாலையோரம் உலா வந்த கரடி, மரத்தின் மீது ஏறி இலந்த பழங்களை சாப்பிட முயன்றது. கரடி பொது வெளியில் உலா வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதிகள் முழுவதும் செடி கொடிகள் காய்ந்து கடும்
வறட்சி நிலவி வருகிறது. அதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்
பகுதிகளும் முழுவதும் உறைப்பனி பொழிவின் காரணமாக செடி, கொடிகள் காய்ந்து
வனப்பகுதிகள் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது.
இதனையும் படியுங்கள்: வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்
இதனால் யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் நீர் நிலைகளை தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் நிலவு வரும்
கடும் வறட்சி காரணமாக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று மசினகுடி
சாலையோரம் உணவு தேடி உலா வந்தது.

இதனையும் படியுங்கள் : காயமடைந்த மிளா குட்டி : சிகிச்சை அளித்து காட்டில் விட்ட தமிழ்நாடு வனத்துறை
அப்போது சாலையோரம் இருந்த இலந்த பழம் மரத்தின் மீது ஏறி பழங்களை சாப்பிட
முயன்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
– யாழன்







