இந்தியாவில் ரயில் சேவைகளைப் பெறுவதற்கான முக்கியமானது யுடிஎஸ் (UTS) செயலி ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி வாயிலாக ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்ஃபார்ம் டிக்கெட் உள்ளிட்ட முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பயனர்கள் பெற்று வந்தனர்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ‘RailOne’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியானது முன்பதிவில்லா டிக்கெட்டுகள், முன்பதிவு டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மட்டுமின்றி, ரயில்களின் இயக்க நிலை, பயணிகளின் காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது.
இந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 1ஆம் தேதி முதல் UTS செயலியின் சேவையை முற்றிலுமாக நிறுத்துவதாகவும், பயனர்கள் அனைத்து சேவைகளையும் ‘RailOne’ செயலி மூலம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







