நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. சிவகார்த்திகேயன், விஜய்-ஐ தொடர்ந்து தனுஷும் தெலுங்கு இயக்குநருடன் இணைந்துள்ளார்.
தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் பிப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை, சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளன.
இதையும் படியுங்கள் : நெரிசலில் நெளியும் சென்னை – நியூஸ்7 தமிழின் மெகா கள ஆய்வு!
வெளியான நாள் முதலே வாத்தி திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம், முதல் வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாயும், தெலுங்கில் 16 கோடியும், வெளிநாடுகளில் 5 கோடி ரூபாயும், வாத்தி திரைப்படம் வசூலித்துள்ளது.







