சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, தமிழினத்திற்கான அரசியல் பாதையில் நாம் தமிழர் கட்சி சென்று கொண்டிருப்பதாகவும், 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் கட்சி, நாம் தமிழர் கட்சி தான் என்றும் தெரிவித்தார். தாம், ஓட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காகவே வந்துள்ளதாக கூறிய சீமான், தொழிற்சாலைகளால் விளைநிலங்கள் அழிக்கப்படுவதாகவும், நஞ்சில்லா உணவு, அதுவே நாம் தமிழர் கட்சியின் கனவு என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூர் தொகுதியை தமிழ்நாட்டிலே முதன்மை தொகுதியாக மாற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.