புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது . இந்த திறப்பு விழாவிற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அழைப்பிதழ்களை
அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அனுப்பினர்.
இந்த நிலையில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக ஐயர், ஐயங்கார் மற்றும் கிருத்துவ மதத்தைச் சேர்ந்த பாதிரியார்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் பல்வேறு விதமான பழங்கள் , பருப்பு வகைகள் உள்ளிட்டவைகளை சீர்வரிசையாக கொண்டு வந்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அளித்தனர்.
இதனையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
பள்ளிவாசல் திறப்பு விழாவில் மாற்று மதத்தினரும் சீர்வரிசை கொண்டு வந்து ஊர்வலமாக கலந்து கொண்டது மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும்
வகையில் இந்த நிகழ்வு அமைந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.







