இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசிக்கிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி, இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
இதையும் படிக்க: ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் மீதான மோசடி புகார் : உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி வருகிறது. இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்து வருகிறார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவருடன் இணைந்து அவர் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/MumbaiCricAssoc/status/1636641244141977601?cxt=HHwWgoCw3cmiwrYtAAAA
-ம.பவித்ரா







