உரிய இழப்பீட்டை வழங்கியபின் நிலத்தை கையகப்படுத்தலாம்- தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை

அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, உரிய இழப்பீட்டை வழங்கிய பின்னர் கையகப்படுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை  வழங்கியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு வண்டலூர் பகுதியில் ஜி.எஸ்.டி சாலை மற்றும்…

அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, உரிய இழப்பீட்டை
வழங்கிய பின்னர் கையகப்படுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை  வழங்கியுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு வண்டலூர் பகுதியில் ஜி.எஸ்.டி சாலை மற்றும் மீஞ்சூர் –
கல்கத்தா நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க
ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நில உரிமையாளர்களுக்கு ஒரு சென்ட்டுக்கு 1,150 ரூபாய் என இழப்பீடு
நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதல் இழப்பீடு கோரி நில உரிமையாளர்கள் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனையும் படியுங்கள்: சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நிலம் கையகப்படுத்துவது
தொடர்பாக ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது குறித்து வேதனை தெரிவித்தார்.

கையகப்படுத்தும் நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஏற்ப இழப்பீட்டை
நிர்ணயிப்பதன் மூலம் வழக்குகள் தாக்கல் செய்வது குறையும் எனவும், இதுபோன்ற
வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதிக்கு
பரிந்துரை செய்யப்படும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் முன் உரிய இழப்பீட்டை
உரிமையாளர்களுக்கு வழங்கலாம் எனவும் யோசனை தெரிவித்த நீதிபதி, மனுதாரர்களுக்கு சென்ட்டுக்கு 15 ஆயிரம் என நிர்ணயித்து, கடந்த 2021 முதல் கணக்கிட்டு 15 சதவீத வட்டியுடன் 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.