களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது. இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிரப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட தேசிய பாதுகாப்புப் படை கேரளத்துக்கு விரைந்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வரும் இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதனிடையே மத வழிபாட்டுக் கூடத்தில் குண்டு வெடித்தது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவம் குறித்து கேட்டறிந்தார். சம்பவ இடத்துக்கு தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்புப் படை விரைந்து செல்ல அவர் உத்தரவிட்டுள்ளார். மதவழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது குறைந்த சிக்கிக்கொண்ட டிபன் பாக்ஸ் ஐஇடி வகை வெடிகுண்டு. சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு சம்பவ இடத்தில் இருந்து அதற்கு சற்று முன்னதாக நீல நிற சொகுசு கார் சந்தேகப்படும்படி கிளம்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற காரை எர்ணாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.







