தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடல்நலக் குறைவால் இன்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டை தொடர்பான பிரச்சினைகள், இருமல் மற்றும் காய்ச்சல் நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சரத் பவார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முதலில் பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக புனேயில் உள்ள ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து அவரது மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே கூறுகையில், “யாரும் பயப்பட வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.







