கலைஞர் கோட்டம் திறப்புவிழா: திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம்…

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகை தந்தார்.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் மற்றும் கலைஞர் சிலையை தமிழக முதலமைச்சர் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.

செவ்வாய் கிழமை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகை தந்தார். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பல அமைச்சர்கள்,சட்ட மன்ற உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதனை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைந்தார். அப்போது, மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாமல், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.